சிலுவை மீதே தொங்கிய இயேசு
Siluvai meethae thokiya
கடைசி ஏழு வாக்கு உரைத்து கர்த்தர் அங்கே மரித்தார் மன்னித்திடும் பிதாவே நீர் என்ன செய்கின்றோமென்று இன்று இவர்கள் அறிந்திடார்கள் என்றேசு கதறினார் 6.
கள்ளர் நடுவில் குற்றமில்லாத கர்த்தர் அன்று தொங்கும் வேளையில் வலது கள்ளன் அவரை நம்ப மற்றவனோ இகழ்ந்தான் இன்றைக்கு நீ என்னுடனே இன்பப் பரதீசில் இருப்பாய் என்று உரைத்து ஏசு கள்ளனை மீட்டெடுத்தார்
கொல்கதா பாதைத் தொடர்ந்த ஸ்திரீகள் கோரக் குருசருகே நின்றார் தமது தாயும் அன்பான சீஷனும் தம்மண்டை நிற்கக் கண்டார் ஸ்திரீயே அதோ உந்தன் மகன் என்று உரைத்தவுடன் சீஷனை நோக்கி அதோ உன் தாயென்று சேர்த்தவ்ர ஒப்படைத்தவர்
லோகத்தின் பாவம் சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டியானவர் பாவ நிவாரண பலியாய்த் தம்மை பூரணமாய் அளித்தார் என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கை விட்டீரோ இன்று பிதாவே உம்முகம் காணேன் என்றேசு கதறினார்
களைத்துப் போன கர்த்தருக்கென்று காடியைத் தோய்த்து நீட்டினார் ஆத்தும தாகம் மனதை நொறுக்க ஆவியில் பாரமுற்றார் வேத மொழி நிறைவேறிட தாகமடைந்தேன் என்றார் நமது தாகம் யாவும் தீர்த்திட தாமே தாகமுற்றார்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.