TA-1910
Tamil

மான்கள் நீரோடைகளை

Siluvai Nizhalathile

29
views
பல்லவி

சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம் நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம் இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா(4)

1ம் சரணம்

சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம் மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம் அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும் அதை மகிமை என்றெண்ணிடுவேன்

2ம் சரணம்

வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன் அதை நித்தமும் காத்துக்கொள்வேன்

3ம் சரணம்

சீஷன் என்பவன் குருவைப் போலவே தனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவானே பரலோக சிந்தை கொண்டு உமக்காய் பணிசெய்வேன் நான் அனுதினமும்

4ம் சரணம்

விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன் மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன் விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன் உண்மையுள்ளவன் என்றழைப்பீர்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.