♪♫
TA-1912
Tamil
உமதன்பு என்னைத் தேற்ற,
Siluvai sumathonaaga
0
views
1ம் சரணம்
சிலுவை தாங்கு மீட்பர் பின் அவரின் சீஷனாகவே; வெறுப்பாய் உன்னை லோகத்தை; பின் செல்வாய் தாழ்மையாகவே.
2ம் சரணம்
சிலுவை தாங்கு, பாரத்தால் கோழை நெஞ்சோனாய் அஞ்சிடாய்; விண் பலம் உன்னைத் தாங்கிடும், வல்லமை வீரம் பெறுவாய்.
3ம் சரணம்
சிலுவை தாங்கு, மேட்டிமை கொள்ளாய், எந்நிந்நை எண்ணிடாய்; நீ பாவம் சாவை மேற்கொள்ள உன் மீட்பர் மாண்டார் ஈனமாய்.
4ம் சரணம்
சிலுவை தாங்கி நின்றிடு, தீரமாய் மோசம் யாவிலும்; சிலுவை சேர்க்கும் மோட்சத்தில் சாவின்மேல் வெற்றி தந்திடும்.
5ம் சரணம்
சிலுவை தாங்கி கிறிஸ்துவை பின்செல்வாய் ஆயுள் முற்றுமே; மகிமை கிரீடம் சூடுவாய் சிலுவை தாங்கின் மட்டுமே.
6ம் சரணம்
திரியேகரான மா கர்த்தா, என்றென்றும் போற்றப்படுவீர்; மேலோக நித்திய வாழ்வுக்கே அடியாரை நடத்துவீர்.