சிங்கார மாளிகையில் ஜெய
Singara Maaligaiyil Jaya
சிங்கார மாளிகையில் ஜெய கீதங்கள் பாடிடுவோம் சீயோன் மணவாளனுடன் ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து ஆறுதலடைந்திடுவோம் அங்கே அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி அன்பரில் மகிழ்ந்திடுவோம் துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார் துதியின் உடையுடனே அங்கே உயரமாம் சீயோன் உன்னதரோடு களித்து கவி பாடுவோம் முள்முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின் திருமுகம் கண்டிடுவோம் அங்கே முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி தரித்தோராய் துதித்திடுவார் பூமியின் அரசைப் புதுப்பாட்டாய் பாடி புன்னகை பூத்திடுவோம் புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய் மண்ணாசை ஒழித்திடுவோம் அவருரைத்த அடையாளங்களெல்லாம் தவறாமல் நடக்கின்றதே அவர் வரும் வேளை அறியாதிருப்பதால் எப்போதும் ஆயத்தமாயிருப்போம் குருசை சுமந்த பரிசுத்தர் முன்னால் குருத்தோலை பிடித்திடுவோம் -ஆ-ஆ- அங்கே கற்புள்ள கறைபடா கர்த்தரை பின்பற்றினோர் மீட்பின் கீதம் பாடுவோம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.