TA-1921
Tamil

அவர் வாக்குப்பண்ணுவார்

Sonnathai Seivaar

0
views
பல்லவி

சொன்னதைச் செய்பவரே! நம்பத் தகுந்தவரே! இயேசு நீர் என்றுமே வாக்கு மாறாதவர் - 2

1ம் சரணம்

திட்டங்கள் எமக்குத் தந்தீர் நிறைவேற்ற பெலனளித்தீர் மேற்கொண்ட செயல்களில் வெற்றிகள் எமக்களித்தீர் உம்மோடு நடப்பதிலே எத்தனை ஆனந்தமே என்றென்றும் ஆனந்தமே - என்றும் ஆனந்தம் ஆனந்தமே!

2ம் சரணம்

மாபெரும் செயல்களை சாதிக்க எம்மை அழைத்தீர் தேசத்தின் எல்லைகளை சுதந்தரிக்கச் சொன்னீர் எதிர்க்கும் சக்திகளை முறிய அடித்திட்டீர் முற்றிலும் ஜெயம் கொள்ளவே - நாங்கள் முற்றிலும் ஜெயம் கொள்ளவே!

3ம் சரணம்

பெலவீனர் எங்களையும் வலிய தெரிந்து கொண்டீர் ஓங்கிய புயத்தினால் பிடித்து நடத்துகின்றீர் துணிவோடு சிதறி திசையெங்கும் செல்வோம் தேசத்தை சுதந்தரிப்போம் - நாம் தேசத்தை சுதந்தரிப்போம்!

4ம் சரணம்

இந்திய தேசம் எங்கும் நற்செய்தி பரவிச் செல்லும் பல்வேறு ஜாதிகளும் இயேசுவை ஏற்றுக்கொள்வார் இந்தியர் பணிந்து சாஷ்டாங்கம் செய்வார் இயேசுவே தேவன் என்பார் - என்றும் இயேசுவே தேவன் என்பார்!