TA-1925
Tamil

ஸ்தோத்தரிப்பேன் என் தேவனையே

Sotharipen en devanaiyae

28
views
பல்லவி

ஸ்தோத்திரிப்பேன் ஸ்தோத்திரிப்பேன் இயேசு தேவனை என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்திரிப்பேனே

1ம் சரணம்

உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான்

2ம் சரணம்

பாவக் கறை நீங்க என்;னை முற்றிலுமாக - உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே

3ம் சரணம்

என்னுடைய நோய்களை உம் காயங்களாலே என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்திரிப்பேன் யான்

4ம் சரணம்

ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் தேவன் தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்திரிப்பேன் யான்

5ம் சரணம்

நாளைத் தினம் ஊண் உடைக்காய் என் சிந்தைகளைக் கவலையற்ற தாக்கினதால் ஸ்தோத்திரிப்பேன் யான்

6ம் சரணம்

சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனை - அதி சீக்கிரமாய்க் காண்பதினால் ஸ்தோத்திரிப்பேன் யான்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.