♪♫
TA-1926
Tamil
Sothatripom sarva valla
Sothatripom sarva valla
23
views
பல்லவி
ஸ்தோத்திர பலி செலுத்தி-சபையாய் தேவ சந்நிதி கூடிடுவோம்-நாம் உற்சாக பலியை இயேசுவுக்கே ஊக்கமுடன் நாம் செலுத்துவோம் துதிப்பது நல்லது இன்பமே தேவனைத் துதிப்பது ஏற்றதே
1ம் சரணம்
நொறுங்குண்ட மனதை குணமாக்கி நறுங்குண்ட ஆவியைத் தேற்றினார் சிதறுண்டோரைக் கூட்டி சேர்க்கின்றார் சுகம் சமாதானமே தருகின்றார்
2ம் சரணம்
பயப்படாதே சிறுமந்தையே பெரிய நல் மேய்ப்பன் நம் இயேசுவே பிரியமுடன் பிதா ராஜ்ஜியமே பரிசுத்த சபைக்கவர் தருகிறார்
3ம் சரணம்
சின்னவன் பெருகுவான் ஆயிரமாய் சிறியவன் பலத்த ஓர் ஜாதியுமாய் நீதியாய் ஆண்டிட காலம் வரும் நமதேசு இதைச் செய்வார் தீவிரமாய்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.