TA-1931
Tamil

கஷ்டங்கள் நஷ்டங்கள் சூழ்ந்திடும் வேளையில்

Sothiram sothiram yesuvukae

27
views
பல்லவி

ஸ்தோத்திரம் இயேசு பரா இத்தருணம் ஸ்தோத்திரம் செய்திடுவோம் மாதுரிய கீதமுடன் சாற்றுவோம் உமதன்பை மாதிரத்தில் நீரெம் ஜெயமே

1ம் சரணம்

கண்களின் மாட்சியாம் அதிலே கண்டெடுத்தீர் எம்மையே கானலோ வேனலோ மானிலமதிலே ஆனதோர் உம் வழியே

2ம் சரணம்

ஆருயிர் இயேசுவே ஒளியாய் சேருவீர் காரிருளில் நேரிடும் சோதனை துன்பங்கள் நடுவே நேமியே கருணை செய்வீர்

3ம் சரணம்

காத்திருந்த சுத்தர் பலரும் இத்தரை நீங்கினாரே சித்தமே யாம் செய்து யாத்திரை தொடர அத்தனே அபிஷேகிப்பீர்

4ம் சரணம்

எம்மையும் மாட்சிக் கென்றழைத்தீர் செம்மை மிகும் மொழியால் உம் திரு சாயலில் எந்நாளும் வளர இம்மையில் கிருபை செய்வீர்

5ம் சரணம்

சிந்தையில் இயேசுவின் நிகராய் சந்ததம் வாழ்ந்தவரே சீயோனாய் சேர்ந்திடும் நாளிதோ வருதே சந்தாபம் தீர்ந்திடுதே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.