TA-1936
Tamil

சிறப்பு பாடல்

Special Songs

27
views
பல்லவி

ஸ்ரீ மா தேவா திருவருள் புரியஇத் தருணமிங்கு நீயும்வா

1ம் சரணம்

அந்தரமாய் வானம் பூமி ஜோதி படைத்து சந்ததமாய் ஏதேன் வாழ்வும் கொடுத்து சிந்தை களிகூர ஆசீர்வாதம் கொடுத்து தினமும் அவரோடு கூடிக் குலாவ வந்தாயே

2ம் சரணம்

வானமும் பூமி வாழவந்த மனுவேலனே தீனத் துயர் நின்றும் மீட்ட தேவராயனே ஞான மணவாளனான நாதர் நீ வர கானம் பாடிக் காத்திருந்துகனிந்து கும்பிட்டேன்

3ம் சரணம்

முந்து கானா ஊரின் கலியானத்தில் வந்தே சிந்தை களிகூரகுறை தீர்க்க முன்னின்றே சிந்து ரசமாக்கி மகிழ சேரவும் வந்தாய் அந்தவிதம் இங்கும்வர அழைத்து கும்பிட்டேன்

4ம் சரணம்

தேவா இங்கு வந்தால் எந்தன் சிந்தை களிக்கும் ஜீவ முடியாடை முகம் ஜோதி ஜொலிக்கும் பாவத் துயர் கண்டு என்றும் பயந்து ஒளிக்கும் ஆவலாக வந்தால் எந்தன் அறிமுகம் செழிக்கும்

5ம் சரணம்

எண்ணும் நன்மை யாவுந்தர என்னோடே இரும் இன்னதென்று சொல்லு முன்பே தந்து கொண்டிரும் முன்னம் சென்று தங்குமிடம் தந்து கொண்டிரும் இந்த வேளைக் காருமில்லையென்று கும்பிட்டேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.