TA-1942
Tamil

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை

Sthothiram seivenae

26
views
பல்லவி

ஸ்தோத்திரம் சொல்லிப்பாடி இயேசுவை எந்நேரமும் துதிப்போம் அல்லேலூயா துதி சொல்லி இயேசுவை என்றென்றும் ஆர்பரிப்போம் அல்லேலூயா அல்லேலூயா

1ம் சரணம்

துதிகளின் நடுவினில் வாசம் செய்வார் துதிக்கின்ற உள்ளமதை தேடி வருவார் துதிகளை நாவினில் நிரம்ப செய்வார் ஸ்தோத்திர பலியினால் மகிமைப்படுவார் இயேசுவின் நாமத்தை உயர்த்திடவே நாம் ஒருமித்துக் கூடிடுவோம்

2ம் சரணம்

துதி செய்யத்தானே நாமும் பிறந்தோம் இதை செய்ய ஏனோ தினமும் மறந்தோம் துதியுடன் இசையை முழங்கச் செய்வோம் தூதர்களுடனே சேர்ந்து துதிப்போம் ஆர்ப்பரித்தே அவர் நாமத்தையே துதிப்பாடி கொண்டாடிடுவோம்

3ம் சரணம்

தேவனின் நாமம் மகிமைப்படவே ஸ்தோத்திரத்தாலே கிருபை பெருகும் உதடுகளின் கனியே ஸ்தோத்திர பலியே உயிருள்ளவரையே நாவில் சொல்லியே நடனத்திலே துதிப் பாட்டு இசைத்து நாம் கர்த்தரை துதித்திடுவோம்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.