TA-2252
Tamil

சுத்தர் துதிக்கும் வீடே

Suththar Thuthikkum Veetae

0
views
பல்லவி

சுத்தர் துதிக்கும் வீடே தெய்வ பக்தர்கள் ஆசையாமே ஒளி மிளிரும் தங்கத் தெரு வீதியில் ஆவலுடன் என்று நான் சேருவேனோ – 2 வானவரின் துதி நாதம் தொனி முழங்கும் சாலேமில் – 2 என்று நான் சேருவேனோ பரசுதனை – 4 முத்தினால் நிரம்பியதாய் உள்ள பனிரெண்டு வாசல்களே – அதை கண்டு வர்ணித்து ஆனந்திப்பேன் – மணவாளன் மனபாரம் நீக்கிடுவார் – 2 காரிருள் இல்லா நாடே – தேவ மகிமையில் மின்னும் வீடே அதின் விளக்கோ தேவாட்டுக் குட்டியாமே-அதில் நின்று பாடித் துதித்திடுவேன் – 2 கட்டங்கள் இல்லா நாடே – தேவ பக்தரின் பரம வீடே -அலங்கரித்த புதிய எருசலேமில் திருமார்பில் என்று நான் சாய்ந்திடுவேன் – 2 இக்காலப் பாடுகளோ தேவ பக்தர்க்கு நிலையில்லையே-இனி வருமே இணையில்லா கன மகிமை – அதை எண்ணி எந்நாளும் வாழ்ந்திடுவோம் – 2