TA-1955
Tamil

தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே

thaettaravaalanae ennaith

22
views
பல்லவி

தேவ கிருபை ஆசீர்வாதம் தினமும் எங்களில் பெருகிட

1ம் சரணம்

ஆவலாயும் தோய்வு நாளில் ஆலயந்தனில் பணிந்து புகழ பாவ அறிக்கை செய்யும் ஜனங்கள் பரனின் கிருபை பெற்று மகிழ - தேவ

2ம் சரணம்

ஆவலாய் எங்கள் ஆண் குழந்தைகள் அழகான இள மரங்கள் போலவும் பாவையர்களாம் பெண் குழந்தைகள் பலத்த சித்திர அரண்கள் போலவும் - தேவ

3ம் சரணம்

எங்கள் பண்டக சாலை சகல இன்ப வஸ்துக்கள் நிறைந்திருக்கவும் பங்க வலசை பகலின் கூக்குரல் பதியில் என்று மில்லாதிருக்கவும் - தேவ

4ம் சரணம்

ஆலயந்தனில் உமது வசனம் அறிவிக்கும் போதகரனைவருக்குள்ளும் வேலை ஓய்ந்து பணியும் சபையார் விரும்பிப் படிக்கும் சகலருக்குள்ளும் - தேவ

5ம் சரணம்

இத்தன்மையுடன் இருக்கும் ஜனங்கள் இவர்கள் தாமென உலகம் சொல்லவும் கர்த்தர் தெய்வமென்றிருக்கும் பாக்கியம் கண்ட ஜனமென்றெம்மைச் சொல்லவும் - தேவ

6ம் சரணம்

உன்னதங்களில் இருக்கும் தெய்வத்தின் உயர்ந்த நாமம் மகிமைப்படவும் இந்நிலம் சமாதானம் பெற்றிட இஷ்டம் மானிடர் மேலுண்டாகவும் - தேவ

7ம் சரணம்

இந்த வீட்டுக்குச் சமாதானம் இன்ப சுகங்கள் அனைத்துண்டாகவும் சந்ததியாய் நீடூழி வாழவும் சபையனைவரும் துதித்துப் பாடவும் - தேவ

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.