♪♫
TA-1956
Tamil
தேவ கிருபை ஆசீர்வாதம்
Thaeva Kirupai Aaseervaatham
24
views
பல்லவி
தேவ கிருபையில் ஆனந்திப்போம் அவர் வழிகளை நாம் அறிவோம் பின் தொடர்ந்திடுவோம் அவர் சுவடுகளை
1ம் சரணம்
இந்த உலகமும் அதின் ஆசைகளும் மெய் சமாதானம் தந்திடாதே அன்பர் இயேசுவின் திரு சன்னதியில் என்றும் சந்தோஷம் மகிழ்ச்சி உண்டே
2ம் சரணம்
பெரும் கஷ்டங்களோ கடும் வியாதிகளோ நம் வாழ்க்கையில் நேரிட்டாலும் எல்லா நம்பிக்கையும் நாம் இழந்திட்டாலும் நேசர் இயேசுவின் உதவி உண்டே
3ம் சரணம்
இயேசு நல்லவர் எல்லாம் கொடுப்பவர் நம்மை என்றுமே நேசிப்பவர் நம் தேவைகள் அனைத்தையும் அறிந்தவரே என்றும் அவரே நம் துணையே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.