♪♫
TA-1962
Tamil
தேவை நிறைந்தவர் இயேசு தேவா வல்லமைதந்திடுமே
Thaevai Nirainthavar
29
views
பல்லவி
தேவை நிறைந்தவர்கள் ஏராளம் ஏராளம் தாகம் நிறைந்தவர்கள் ஏராளம் ஏராளம் ஜெபித்திடுவோம் கொடுத்திடுவோம் துரிதமாய் புறப்படுவோம்
1ம் சரணம்
பக்திக்கு இங்கே பஞ்சமில்லை - ஆனால் பரலோகின் வழியைத்தான் அறியவில்லை இயேசுவே வழியெனக் கூறிடுவோம் களங்களைத் தேடிச் செல்வோம்
2ம் சரணம்
கானல் நீரை மதுரமென்றெண்ணி மூர்ச்சித்து மடிவோர் எத்தனையோ ஜீவத்தண்ணீரை கொடுத்திடுவோம் நித்தியம் சேர்த்திடுவோம்
3ம் சரணம்
சிலைகளின் பாதம் பணிந்திடும் மாந்தர் பலபல ஆயிரம் இங்கு உண்டே கர்த்தரே தெய்வமென உயர்த்திடுவோம் ஜாதிகள் சுதந்தரிப்போம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.