TA-1966
Tamil

தகுவது தோணாது ஏற்கின்றவர்

Thaguvadhu Thoanaadhu Yearkindavar

21
views
பல்லவி

தாய் அன்பை மறக்கமுடியலே தந்தை அன்பை மறக்கமுடியலே உறவுகள் பிரிந்து போனதே தனிமையில் வாடுகின்றேனே-2 மறக்கமுடியலே என்னால் மறக்கமுடியலே, மறக்கமுடியலே என்னால் மறக்கமுடியலே-2

1ம் சரணம்

இதயம் நொறுங்குண்டதே உள்ள பதறுகின்றதே வாழ வழி இல்லையே போக இடமும் இல்லையே தவிக்கின்றதே உள்ளம் தவிக்கின்றதே

2ம் சரணம்

இரவெல்லாம் கண்விழித்து தாலாட்டுவாள் பகலெல்லாம் பசியறிந்து உணவுஊட்டுவாள் சீராட்டி பாராட்டி ஆளாக்குவாள் அதை நினைக்கும் போது கண்கள் கலங்குது

3ம் சரணம்

அன்பை தேடி நான் அலைந்தேனையா அன்புக்காட்ட ஓருவரும் கூடயில்லையே அன்புமில்லை ஆதரவுமில்லை எங்கே போவேனோ என்ன செய்வேனோ -2

4ம் சரணம்

நொருங்குண்ட இதயத்தை தேடிவந்தார் இயேசு கயங்களை எல்லாம் அற்றினார் இயேசு மார்போடு என்னை அணைத்தார் இயேசு நான் உன்னை மறப்பதிலை என்றார் இயேசு நீங்க போதுமே,இயேசுவே நீங்க போதுமே-2

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.