♪♫
TA-1970
Tamil
Thanks giving
Thanks giving
0
views
பல்லவி
தண்ணீரை கடக்கும் போதும் என்னோடு இருப்பவரே வெள்ளங்கள் புரளாமல் என்னை என்றும் காப்பவரே – 2 அக்கினியில் நடந்தாலும் சோதனைகள் சூழ்ந்தாலும் தப்புவித்து காப்பவரே – என்னை அன்பால் அணைப்பவரே – 2
1ம் சரணம்
எரிகோவின் மதில்களெல்லாம் உடைத்தவரே – எங்கள் வாழ்விலும் எதிர்த்து நிற்கும் தடைகளை உடைப்பீரே – 2 கானானை சொந்தமாய் தேவ ஜனம் பெற்றனரே பரலோக கானானை எங்களுக்கும் தருவீரே – 2
2ம் சரணம்
பார்வோனின் சேனை எல்லாம் தொடர்ந்த போதும்-பெரும் செங்கடலை பிளந்து உம் ஜனத்தை நடத்தினீரே – 2 பகலிலே மேகஸ்தம்பம் இரவிலே அக்கினிஸ்தம்பம் அற்புதமாய் நடத்தினதே எங்களையும் நடத்துவீரே – 2