தந்தேன் என்னை இயேசுவே
Thanthen yennai yesuvae
தரணியில் மலரட்டும் இயேசுவின் ஆட்சி தலைமுறை தலைமுறை தொடரட்டும் மீட்சி புறப்படு நீ திருச்சபை செயல்படு நீ அதி விரைவே அறுவடை மிகுதி ஆளில்லையே - 2
இந்திய மண்ணில் எண்ணற்ற கோடி எங்கெங்கோ அலைகிறார் இறைவனைத் தேடி சிந்தையில் கலக்கம் மனதினில் மயக்கம் அங்கங்கே தவிக்கிறார் அமைதியைத் நாடி இந்த நிலை நீக்கவேண்டும் விந்தை ஒளி ஈர்க்கவேண்டும் மந்தைக்குள் பலரைச் சேர்க்கவேண்டும் - 2
இமயத்தில் துவங்கி குமரி வரையில் இம்மானுவேலனை வணங்கிடவேண்டும் சமயங்கள் பலவும் சகலமும் படைத்த சர்வாதி கர்த்தரைப் பணிந்திடவேண்டும் பாரதமே மாறவேண்டும் பரனேசுவைச் சேரவேண்டும் பரிசுத்த ஆவியின் மாரி வேண்டும் - 2
ஞாலத்தில் முழுதும் நற்செய்தி பரவும் வேளைதான் முடிவின் அடையாளம் தெளிவாய் காலத்தை உணர்வோம் கடுமையாய் உழைப்போம் கர்த்தரின் வருகை நெருங்குதே விரைவாய் அழைப்பின் குரல் கேட்கலையோ அவசரமும் புரியலையோ அவகாசம் முடிந்தது கிளம்பலையோ - 2