♪♫
TA-1981
Tamil
அதிகாலையின் தென்றலும் என்னை தொடரவே
The Morning Breeze
22
views
பல்லவி
தேடி வந்த அன்பை என்னவென்று சொல்வேன் சொல்வதரியாமல் திகைத்து போய் நின்றேன் நிலையில்லா ஜீவனில் நிஜமென்று கண்டேன் இயேசு என் அன்பரை ஏதென்று சொல்வேன் மணவாளனே என் ஆயனே மணவாளனே என் ராஜனே
1ம் சரணம்
ஏங்கும் மனதிற்குள் வந்து துணையாக வாழும் மணவாளன் நான் கேட்கும் விருப்பங்கள் தந்து என் வாழ்வில் அழகு பார்க்கும் ராஜன்
2ம் சரணம்
கண்களில் ததும்பிடும் கண்ணீர் துடைப்பார் என் நெஞ்சத்தில் நிலைப்பார் நான் கையிடும் ஸ்வப்னங்களில் இருப்பார் துணையாய் யாத்திரையில் வருவார்
3ம் சரணம்
அறியாமல் தடுமாறும் என் வாழ்வில் துணை நீரே தடம் புரண்டும் நிலை மாண்டும் நிறம் மாறா நிஜம் நீரே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.