TA-1982
Tamil

தேடி வந்த அன்பை

Thedi Vantha Anbai

25
views
பல்லவி

தேடி வந்தார், தேடி வந்தார், தேடி வந்தாரே தேவ சேயனாம் அன்பின் ரூபமாய்-இயேசு தேடி வந்தாரே

1ம் சரணம்

காரிருள் சூழ்ந்த பாவ உலகின் வாரிதியில் அழியா தாரகையாய் நின்று நேர் வழி காட்டிடும் மா வரும் இரட்சகராய்

2ம் சரணம்

தேடுவாரின்றியே ஓடி அலைகையில் மேடுகள் மீதினிலே கூட்டி நல் மேய்ப்பராய் மந்தையிற் சேர்த்து ஈடேற்றிட நினைந்தவராய்

3ம் சரணம்

பாரஞ் சுமந்தே உள்ளம் நொந்தோரை பரிந்து ஏற்றிடவும் போக்கிடவும் வினை நீக்கிடவும் தேவ ஆக்கினை ஏற்றவராய்

4ம் சரணம்

ஆழி போல் ஆழ்ந்த அவர் தனத்தால் தாழ்ந்தோரை வாழ்விக்கவே ஏழ்மையின் கோலமே பூண்டவராயிருந்த பாழுலகந்தனிலே

5ம் சரணம்

ஜீவனுள்ள மா நம்பிக்கை யீயும் சீயோனில் தூதுகளால் நித்தியரான பிதாவின் நற்சாயலில் நித்தம் வளர்ந்திடவே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.