♪♫
TA-1989
Tamil
கனியிலா அத்தியைக் கத்தியால் வெட்டி எடடிப்போடச்
Thiratchai thota karan
21
views
பல்லவி
திரிமுதல் கிருபாசனனே சரணம்! ஜெக தல ரட்சக தேவா சரணம்! தினம் அனுதினம் சரணம் கடாட்சி! தினம் அனுதினம் சரணம் சருவேசா!
1ம் சரணம்
நலம் வளர் ஏக திரித்துவா சரணம்! நமஸ்கரி உம்பர்கள் நாதா சரணம்! நம்பினேன் இது தருணம் தருணம் நம்பினேன் தினம் சரணம் சருவேசா!
2ம் சரணம்
அருவுருவே அருளரசே சரணம்! அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம் அதிகுணனே தருணம் கிரணமொளிர் அருள் வடிவே சரணம் சருவேசா!
3ம் சரணம்
உலகிட மேவிய உனதா சரணம்! ஓர் கிருபாசன ஒளியே சரணம்! ஒளி அருள்வாய் தருணம் மனுவோர்க்கு உத்தமனே சரணம் சருவேசா.
4ம் சரணம்
நித்திய தோத்திர நிமலா சரணம்! நிதி இசரேலரின் அதிபதி சரணம்! நீதா இது தருணம் கிருபைக்கொரு ஆதாரா சரணம் சருவேசா!
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.