TA-1992
Tamil

சொந்தம் பந்தம் விட்டுச் சென்றான் ஊரிலே

Thirumpi Vanthaan

24
views
பல்லவி

திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பை கண்டைந்தேன் தேவ சமூகத்திலே

1ம் சரணம்

இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்குத் தங்கிடுவேன்

2ம் சரணம்

என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே

3ம் சரணம்

மனம் மாற மாந்தர் நீரல்ல மன வேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே இயேசுவே உம்மை அண்டிடுவேன்

4ம் சரணம்

என்னைக் கைவிடாதிரும் நாதா என்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் சகிப்பேன் உமது பெலன் ஈந்திடுமே

5ம் சரணம்

உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே உண்மையாய் வெட்கம் அடையேன் தமது முகப் பிரகாசம் தினமும் என்னில் வீசிடுதே

6ம் சரணம்

சத்துரு தலை கவிழ்ந்தோட நித்தமும் கிரியை செய்திடும் என்னைத் தேற்றிடும் அடையாளம் இயேசுவே இன்று காட்டிடுமே

7ம் சரணம்

விசுவாசத்தால் பிழைத்தோங்க வீரபாதைக் காட்டினீரே மலர்ந்து கனிதரும் வாழ்வை விரும்பி வரம் வேண்டுகிறேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.