TA-1999
Tamil

Thothira Pandigai Aasaripooma

Thothira Pandigai Aasaripooma

23
views
பல்லவி

ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனை ராஜாதி ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன்

1ம் சரணம்

அற்புதமான அன்பே என்னில் பொற்பரன் பாராட்டும் தூய அன்பே என்றும் மாறா தேவ அன்பே என்னுள்ளம் தங்கும் அன்பே

2ம் சரணம்

ஜோதியாய் வந்த அன்பே பூவில் ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே தியாகமான தேவ அன்பே திவ்விய மதுர அன்பே

3ம் சரணம்

மாய உலக அன்பை நம்பி மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே என்னை வென்ற தேவ அன்பே என்னில் பொங்கும் பேரன்பே

4ம் சரணம்

ஆதரவான அன்பே நித்தம் அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே உன்னத மா தேவ அன்பே உள்ளங் கவரும் அன்பே

5ம் சரணம்

வாக்கு மாறாத அன்பே திரு வார்த்தை உரைத்தென்னைத் தேற்றும் அன்பே சர்வ வல்ல தேவ அன்பே சந்ததம் ஓங்கும் அன்பே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.