♪♫
TA-2001
Tamil
துக்க பாரத்தால் இளைத்து
Thukga barathaal
25
views
பல்லவி
துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல துதித்து துதித்து தினம் மகிழ்ந்து மகிழ்ந்து மனம் துள்ளுதையா
1ம் சரணம்
அன்பு பெருகுதையா – என் அப்பாவின் நிழல்தனிலே அபிஷேகம் வளருதையா எபிநேசர் பார்வையிலே
2ம் சரணம்
உள்ளங்கள் மகிழுதையா உம்மோடு இருக்கையிலே பள்ளங்கள் நிரம்புதையா பாடி துதிக்கையிலே
3ம் சரணம்
நம்பிக்கை வளருதையா நாதா உம் பாதத்திலே நன்மைகள் பெருகுதையா நாள்தோறும் துதிக்கையிலே
4ம் சரணம்
நோய்கள் நீங்குதையா – உம்மை நோக்கிப் பார்க்கையிலே பேய்கள் அலறுதையா பெரியவர் நாமத்திலே
5ம் சரணம்
கண்ணீர்கள் மறையுதையா கர்த்தர் உம் சமூகத்திலே காயங்கள் ஆறுதையா கருத்தோடு துதிக்கையிலே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.