துணை என்றும் இயேசு தேவா
Thunai endrum yesu
துணையாளரே தேற்றிடும் தேற்றரவாளனே தயைசெய்தீரே தடையாவும் தகர்ந்துபோகவே திறப்பில் நின்றிடும் என் கைகள் தளராமல் திடன் தந்தீரே என் தாபரமானீரே நான் கைகளை உயர்த்தி துதித்திட துதித்திட கிருபையும் பெருகுதே நான் முழங்காலை முடக்கி ஜெபித்திட ஜெபித்திட உம் தரிசனம் கிடைத்ததே
எனக்கு முன்குறித்ததை நிறைவேற்றி முடித்திட என் மேல் கண்களை வைத்து அனுதினம் போதித்தீர் எளியவனான என்னை உயர்த்த எட்டாத பெரிய காரியங்கள் அறிவித்தீர் ஏற்ற காலத்திலே மழை பெய்ய செய்தீர் எல்லைகள் யாவையும் விஸ்தாரமாக்கினீர் எண்ணிலா நன்மைகள் எனக்காக செய்கின்றீர்
மலைகளை பெயர்க்கவும் குன்றுகளை தகர்க்கவும் மேலான விசுவாசம் எனக்குள்ளே வைத்தீர் மந்தையை சேர்த்திடவும் மேய்ச்சலில் நடத்திடவும் மங்காத பிரசன்னத்தால் மனதினை நிறைத்தீர் மேகஸ்தம்பம் போல என்னை சூழ்ந்துகொண்டீர் மறைவிட பொக்கிஷங்கள் பரிசாக தந்தீர் மண்ணான என்னையும் மறுரூபமாக்கினீர்
இயல்பான வாழ்வு தந்து என்னை இயக்கிடும் இரக்கத்தின் ஐஸ்வர்யம் நீர்தானே இயேசுவே இலைகள் உதிராமல் கனி தந்து நிரப்பி இடம் கொண்டு பெறுக செய்யும் நீர் போதும் எனக்கு இம்மட்டும் ஜீவன் சுகம் பெலன் தந்தீர் இரட்சிப்பின் ஊற்றுகள் சுரந்திட செய்தீர் இஸ்ரவேல் என்று பெயர் சொல்லி அழைத்தீர்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.