TA-2007
Tamil

துதிக்கென்றும் பாத்திரரே பரிசுத்தமானவரே

Thuthikkenrum Paaththirarae

22
views
பல்லவி

துதிக்குப் பாத்திரரே எந்தன் துணையாளரே ஆபத்து காலத்தில் அடைக்கலமே ஆதரவே என் அனுகூலமே உம்மை ஆராதனை செய்கிறேன் உம்மை ஆராதனை செய்கிறேன் உன்னதரே உயர்ந்தவரே உம்மையே ஆராதிப்பேன்

1ம் சரணம்

யெகோவா ஷாலோம் நீரே எந்தன் சமாதானமே நித்திய மகிழ்ச்சி எனக்கு தந்தீர் சஞ்சலம் தவிப்பு நீக்கிவிட்டீர்

2ம் சரணம்

யெகோவா ஷம்மா நீரே என்னோடு இருப்பவரே என்ன வந்தாலும் கலங்கிடேனே அப்பா நீர் என்னோடு இருப்பதனால்

3ம் சரணம்

யெகோவா நிசி நீரே எந்தன் ஜெயக் கொடியே மனம் மகிழ்ந்து பாடிடுவேன் மகிமையாய் நீர் வெற்றி சிறந்தீர்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.