TA-2012
Tamil

Thuyaruitra ventharae

Thuyaruitra ventharae

0
views
1ம் சரணம்

துக்கம் கொன்டாட வாருமே, பாரும்! நம் மீட்பர் மரித்தார்; திகில் கலக்கம் கொள்ளுவோம்; இயேசு சிலுவையில் மாண்டார்.

2ம் சரணம்

போர் வீரர், யூதர் நிந்தித்தும் மா பொருமையாய்ச் சகித்தார்; நாமோ புலம்பி அழுவோம் இயேசு சிலுவையில் மாண்டார்.

3ம் சரணம்

கை காலை ஆணி பீறிற்றே, தவனத்தால் நா வறண்டார்; கண் ரத்தத்தாலே மங்கிற்றே இயேசு சிலுவையில் மாண்டார்.

4ம் சரணம்

மும்மணி நேரம் மாந்தர்க்காய் தம் மௌனத்தாலே கெஞ்சினார்; நல் வாக்கியம் ஏழும் மொழிந்தே, இயேசு சிலுவையில் மாண்டார்.

5ம் சரணம்

சிலுவையண்டை வந்துசேர், நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்; ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்; இயேசு சிலுவையில் மாண்டார்.

6ம் சரணம்

உருகும் நெஞ்சும் கண்ணீரும் உள்ளன்பும் தாரும், இயேசுவே; மாந்தர்மீதன்பு கூர்ந்ததால் நீர் சிலுவையில் மாண்டீரே!