♪♫
TA-2014
Tamil
துதி கீதங்களால் புகழ்வேன்
Tuthi geethangalal
0
views
பல்லவி
துதி பாடல் ஓய்வதில்லை பதிவாகும் திரு நாமமே ஆதியில் ஓர் வார்த்தையே - அவர் ஜோதி பிதா இயேசுவே
1ம் சரணம்
அண்ட சராசரங்கள் அவர் மூலம் உண்டாகாதே இயேசுவால் கூடாததில்லை - அவர் எமக்காக யாவும் செய்வார்
2ம் சரணம்
கடல் மேல் நடந்தவரே கஷ்டங்கள் தீர்ப்பவரே ஒன்றான மெய் தேவன் இயேசு-நேற்றும் இன்றென்றும் மாறிடாரே
3ம் சரணம்
நிகரே இல்லாதவரே நீதி நிறைந்தவரே எளியோரின் இரட்சகர் இயேசு-எம்மை என்றென்றும் கைவிடாரே
4ம் சரணம்
உலகத்தில் வந்தவரே உயிர் தந்த நம் மீட்பரே பரிசுத்தமானவர் இயேசு - அவர் பிள்ளைகள் அவர் சாயலாவோம்
5ம் சரணம்
மாண்டு உயிர்த்தெழுந்தார் மீண்டும் வரப்போகிறார் வானமுத கீதங்கள் பாடி-சர்வ வல்லவர் பாதம் சேர்வோம்.