Uirodu eluthavarae
Uirodu eluthavarae
உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் - எந்தன் உயிருள்ள மட்டும் நான் பாடித் துதிப்பேன் - என் அல்லேலூயா (8)
நான் பாடும் போது என் உதடுகளும் நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழ்ந்திட துதி செய்குவேன் கர்த்தருக்கே மகிமையைச் செலுத்திடுவேன்
ஜீவ கிறிஸ்து என்னோடிருக்கிறார் ஜீவாதிபதி நான் நம்பும் கன்மலை ஜீவிய காலமெல்லாம் அவர் கிருபை ஜீவன் சுகம் பெலனும் எனக்கருள்வார்
கண்ணீர் கவலை என் கஷ்டம் நீக்குவார் நண்பனைப் போல என்னை விசாரிப்பார் உன்னை விட்டு விலகிடேன் உன்னை கைவிடேன் என்ற அவர் வாக்குத்தத்தம் என்னை தேற்றுதே
பாதாளமெல்லாம் நடு நடுங்கிட வேதாளம் பேயை சாவையும் ஜெயித்தார் ஏவாளை வஞ்சித்திட்ட வலுசர்ப்பத்தை இயேசுவின் இரத்தத்தாலே நானும் ஜெயிப்பேன்
ஆமென் கர்த்தாவே நீர் வேகம் வாருமே அன்றாடகமே என் ஜெபம் ஆவியில் நிறைந்து நான் பறந்து சென்றே ஆகாயத்தில் கர்த்தாவே நான் உம்மைச் சந்திப்பேன்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.