TA-2024
Tamil

உம் பாரிசுத்தத்தை காணும்போது

Um parisuthathai

24
views
பல்லவி

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

1ம் சரணம்

பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே தேடினதால் கண்டடைந்தேன் பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர்

2ம் சரணம்

புது எண்ணெய்யால் புது பெலத்தால் புதிய கிருபை புது கவியால் நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர்

3ம் சரணம்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர் திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர்

4ம் சரணம்

என் முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல் உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே

5ம் சரணம்

கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க கிளை நறுக்கிக் களை பிடுங்கி கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர்

6ம் சரணம்

என் இதய தெய்வமே நீர் எனது இறைவா ஆருயிரே நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன்

7ம் சரணம்

சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில் சீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.