TA-2034
Tamil

Umathu Mugam

Umathu Mugam

0
views
பல்லவி

உமது சமூகம் வரும் போதெல்லாம் எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது – 2 உமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சி உமது சமூகத்தில் பேரானந்தம் ஒரு நாளும் மாறாதைய்யா – ஒரு நாளும் ஒரு போதும் மாறாது மாறாது உம் சமூகமே உம் சமூகமே

1ம் சரணம்

மேற்கிலும் கிழக்கிலும் வடக்கிலும் தெற்கிலும் அலைந்து நான் திரிந்தாலும் விடுதலை இல்லையே – 2 நித்திய ஜீவனுள்ள வார்த்தைகள் உம்மிடமுண்டு – 2 உமது வார்த்தையால் திருப்தி ஆகிறேன் – 2

2ம் சரணம்

பன்னிரண்டு வருடமாய் பெரும்பாடுள்ள ஒரு பெண் அநேக வைத்தியரால் கைவிடப்பட்டவளாய் – 2 இயேசுவின் சமூகத்திற்கு ஓடோடி வந்தாளே – 2 இயேசுவின் வஸ்திரத்தை தொட்டதால் சுகமானாள் – 2

3ம் சரணம்

இஸ்ரவேலின் சேனைகள் முன்னே கடந்திட்ட தேவசமூகம் ஒருவரும் பெலவினராய் இருந்ததுமில்லையே – 2 இரவினில் அக்கினி ஸ்தம்பம் பகலில் மேக ஸ்தம்பம் – 2 பாதுகாத்து நடத்தினீரே சேனைகளின் தெய்வமே – 2

4ம் சரணம்

உமது சமூகத்திலே வாசமாய் இருப்பவர்கள் திருப்தியாய் சாப்பிடவும் நல்ல வஸ்திரம் தரிக்கவும் – 2 கையிட்டு செய்கின்ற வேலையெல்லாம் ஆசீர்வதிப்பீர் – 2 ஆசீர்வாத வாய்க்காலாய் எங்கள மாறச்செய்வார் – 2