♪♫
TA-1013
Tamil
Umathu Vairaakkiyam Thaarum
Umathu Vairaakkiyam Thaarum
0
views
பல்லவி
விளைந்த நிலம் ஏராளமே அறுவடைக்கோ ஆளோ இல்லை விளைவின் பலன் அழிகின்றதே - 2 அறுத்திடச் செல்வார் யாருமில்லை - 2
1ம் சரணம்
சமாரியா நாட்டின் விளை நிலத்தை அறுத்திட இயேசு தானே சென்றார் என் அருமைச் சீடர்களே - 2 கண்களை உயர்த்தி பாரும் என்றார் - 2
2ம் சரணம்
கோடி கோடியான ஜனங்கள் இன்று அழிகின்றார் நரகத்தில் இயேசு இன்றி என் ஜனங்கள் அழிந்திடாமல் - 2 தடுத்திடுவார் இங்கு யார்தானுண்டு? - 2
3ம் சரணம்
உலகினில் வாழ்வது ஒரு தரமே அதுவும் சீக்கிரம் கடந்திடுமே கர்த்தருக்காக வாழ்ந்திடுவோம் - 2 இயேசுவை அறிவிக்க புறப்படுவோம் - 2