TA-2035
Tamil

உம்மாலே கூடாத

Ummaalae Koodaatha

0
views
பல்லவி

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே என்னை அழைத்து செல்கின்றீரே உந்தனின் மகிமையை நானும் கண்டு ஆராதிக்கச் செய்கின்றீர் – 2 அழைத்து செல்கின்றீர் உம்மை தரிசிக்க வைக்கின்றீர் – 2 பரிசுத்த கரங்களினால் உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் உந்தன் நாமத்தை தொழுதிடுவேன்

1ம் சரணம்

பிரகார பலிபீட பலியால் என்னை பரிசுத்தம் செய்கின்றீர் – 2 இரத்தமும் தண்ணீரும் என்னைக் கழுவ இரட்சிப்பை தருகின்றீர் – 2

2ம் சரணம்

பரிசுத்த சமூக பிரசன்னத்தால் என்னை உம்மோடு இணைக்கின்றீர் – 2 வசனமும் வெளிச்சமும் என்னை நடத்த ஜெபிக்க வைக்கின்றீர் – 2

3ம் சரணம்

மகா பரிசுத்த ஸ்தலத்தில் என்னை துளிர்க்க வைக்கின்றீர் – உந்தன் – 2 ஷெக்கினா (Shekinah) மகிமை என்னை நிரப்ப என்னில் நீர் தங்குகின்றீர் – 2