TA-2040
Tamil

உம்மை நினைக்கும் நினைவுகளும்

Ummai ninaikum

29
views
பல்லவி

உம்மை நோக்கி கூப்பிட்டேன் எனக்காய் வந்திரே என்னோடு பேசத்தான் எனக்காய் வந்தீரே அறியாத வழியில்ல என்னை நடத்தினீரே எனக்கு எட்டாத காரியத்தை செய்தீரே – 2 கர்த்தர் நீர் பேசினீரே கண்மணிபோல் காத்தீரே வாழ வைத்தீரே உமக்காய் வாழ வைத்திரே சுகம் கொடுத்தீரேஎனக்கு சுகம் கொடுத்தீரே

1ம் சரணம்

வான்பராபரனே வல்லமையின் அக்கினியே கிருபையின் மன்னவனே கிருபை ஊற்றுமே அன்பு கொண்ட தகப்பனே ஆதியும் அந்தமுமே பாசமுள்ள ராஜாவே பரிசுத்த ஆவியே பிளவுண்ட மலையிலே என்னை மூடி காத்திரே கன்மலையின் உச்சியிலே நித்தியமாய் வைத்தீரே

2ம் சரணம்

உலகம் நிலையில்லையே இயேசுவுக்கு இணையில்லையே தாய் நம்ம மறந்தாலும் தேவன் மறப்பதில்லையே பட்டம் பதவி போனாலும் படைத்தவர் இருப்பாரே உள்ளங்கையில் வரைந்தாரே மகிமையாய் மாற்றினாரே கர்த்தர் நீ சொன்னபடி கண்மணிபோல் காத்தீரே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.