TA-2041
Tamil

Ummai nokki parkindrien

Ummai nokki parkindrien

0
views
பல்லவி

உம்மை பாட என் சிறு நாவு போதுமோ உம் புகழ் சொல்ல என் அற்ப ஆயுள் போதுமோ – 2 பிரதி பலன் ஏதும் என்னிடத்தில் எதிர்பாராமல் – 2 பல கோடி நன்மைகள் செய்தீரையா இயேசையா இயேசையா பல கோடி நன்மைகள் செய்தீரையா

1ம் சரணம்

உம் வார்த்தையால் என்னை உயிர்பிக்கின்றீர் நீர் பாழான என் வாழ்வை புதுப்பிக்கின்றீர் – 2 களை பிடுங்கினீர் கிளை நறுக்கினீர் – 2 உம் சாயலாய் என்னை உருவாக்கினீர் இயேசையா இயேசையா உம் சாயலாய் என்னை உருவாக்கினீர்

2ம் சரணம்

உம்மை போல பூவில் யாரும் இல்லை உமக்கொப்பானவர் இங்கே எவரும் இல்லை – 2 அகிலத்திற்கும் ஆண்டவர் நீர் – 2 என் மனம் கவர்ந்த மன்னவர் நீர் இயேசையா இயேசையா என் மனம் கவர்ந்த மன்னவர் நீர்

3ம் சரணம்

உள்ளங்கையில் என்னை வரைந்து வைத்தீர் கண் உறங்காமல் தினம் என்னை காத்து வந்தீர் – 2 இது வரைக்கும் நடத்தி வந்தீர் – 2 இயேசையா இயேசையா இனிமேலும் துணையாய் நீர் இருப்பீர்