TA-2044
Tamil

உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே

Ummai thuthipen

26
views
பல்லவி

உம்மை துதிப்பேன் நான் உம்மை புகழ்வேன் நான்

1ம் சரணம்

அழிவில் நின்று பிராணனை மீட்டுக் கொண்டீரே கிருபை இரக்கத்தால் கீரிடம் சூட்டினீர்

2ம் சரணம்

நன்மைகளினால் எந்தன் வாயை நிரப்பினீர் கழுகைப் போல் சிறகை விரிக்கச் செய்தீரே

3ம் சரணம்

என் பாவங்களுக்குத் தக்கதாக செய்யாமல் உந்தன் பெரிய கிருபையாலே நேசித்தீரே

4ம் சரணம்

எந்தன் உருவம் இன்னது என்று அறிந்தவரே மண்ணாம் இந்த ஏழையை நீர் கண்டீரே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.