♪♫
TA-2052
Tamil
Ummel Vaanjaiyai
Ummel Vaanjaiyai
0
views
பல்லவி
உம்மில் நான் வாழ்கிறேன் உமக்குள்ளே வளர்கிறேன்
1ம் சரணம்
ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளே வேர் கொண்டு வளரும் மரம்தானே படர்ந்திடுவேன் நிழல் தருவேன் பறவைகள் தங்கும் வீடாவேன்
2ம் சரணம்
அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல் அமைந்து உயரும் கட்டடம் நான் பெருங்காற்று அசைப்பதில்லை பெருமழையோ பிரிப்பதில்லை
3ம் சரணம்
இயேசுவே எனது தலையானீர் நானோ உமது உடலானேன் உம்நினைவு என் உணவு உம் விருப்பம் என் ஏக்கம்
4ம் சரணம்
செடியான உம்மோடு இணைந்துவிட்டேன் கொடியாய் படர்ந்து கனிதருவேன் இலைகளெல்லாம் மருந்தாகும் கனிகளெல்லாம் விருந்தாகும்
5ம் சரணம்
உமது வார்த்தைகள் எனக்குள்ளே உந்தன் ஆவி என்னோடே மீட்பளிக்கும் நறுமணம் நான் கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன்