♪♫
TA-2054
Tamil
Ummodu selavidum
Ummodu selavidum
0
views
பல்லவி
உம்மோடு தான் நான் இருப்பேன் உம்மையே நான் உயர்த்திடுவேன் – 2 யெகோவா யீரே போதும் நீரே எந்தன் வாழ்வினிலே – 2
1ம் சரணம்
இதயம் மகிழுதே நன்றி சொல்லுதே ஏசையா உம் பிரசன்னத்தில் – 2 எப்போதும் என் கண்கள் உம்மையே பார்க்குமையா – 2 அசைக்கப்படுவதில்லை அமைதி இழப்பதில்லை – 2
2ம் சரணம்
வாழ்வின் வழிதனை எனக்கு காட்டினீர் வாழ்நாளெல்லாம் துதித்திடுவேன் – 2 ஒன்றையே நான் கேட்டேன் அதையே நாடிடுவேன் – 2 ஆயுள் முழுவதும் அப்பா நீர் போதுமே – 2
3ம் சரணம்
தேனிலும் இனிமையை என் வாழ்வின் மகிமையை – 2 உமது சமூகமே எத்தனை அருமை தனிமை நேரங்களில் துணையாய் வந்தீரே – 2 கனிவுடன் எனையே அணைத்து கொண்டீரே – 2