உங்கள் துக்கம்
Ungal Thukkam Sandhoshamai Maarum
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் உங்கள் துன்பம் இன்பமாய் மாறும் மறுபடியும் கர்த்தரைக் கண்டு மகிழுவோம் மகிழுவோம் ஆனந்தம் பாடி சீயோனை நாடி திரும்புவோம் சஞ்சலமும் தவிப்புமோ ஓடிப்போகும் சந்தோஷிப்போம்
சாயங் காலத்தில் அழுகை தங்கும் விடியற் காலத்திலே களிப்புண்டாகும் தேவ கோபமோ ஒரு நிமிஷம் - தேவ தயவோ நீடிய வாழ்வு
அற்ப காலம் மூண்ட கோபத்தினால் இமைப் பொழுது தம் முகம் மறைத்தார் ஆனாலும் நித்திய கிருபையுடன்-கர்த்தர் உனக்கு இரங்கிடுவார்
கர்த்தருடைய சிட்சைகளை நீ அற்பமாக எண்ணாதே சோர்ந்து போகாதே எவனிடத்தில் அன்பு கூருகின்றாரோ - கர்த்தர் அவனை சிட்சித்து தேற்றுவார்
வாழும் ஆத்துமா தேகம் சுகமாய் விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் என்னாலே உன் நாட்கள் பெருகிடுமே என்று என் தேவன் வாக்குரைத்தார்
இயேசு வருவார் அதி விரைவாய் எக்காளம் முழங்க நாம் புறப்படுவோம் ஆகாயத்தில் நாம் எதிர் கொண்டு போய் அன்பின் குமாரனை சந்திப்போம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.