♪♫
TA-2064
Tamil
பண்ணின துரோகமெல்லாம் - எண்ணினா லெத்தனைகோடி
Unnaiyanri Vaeraekathi
0
views
பல்லவி
உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதாகாலம் உயிரோடெழுந்தேன் - இதோ ஜீவிக்கின்றேன் என்றாரே - இயேசு சீயோனே! கெம்பீரி ! சாலமே ! நீ ஸ்தோத்தரி துதியே கனமே மகிமை செலுத்து ! என் மீட்பர் உயிரோடிருக்கின்றார் ! ஆமென் அல்லேலூயா !
1ம் சரணம்
வாக்கு மாறாதவரே - இயேசு சொல் தவறாதவரே சொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே
2ம் சரணம்
சுத்த திருச்சபையே - பறை சாற்றிடு நற்செய்தியே சாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார்
3ம் சரணம்
பாலகர் வாயினிலே - துதி பாடல்கள் முழங்குதே போற்றிப் பாடம் வாயை அடக்கக்கூடாதே
4ம் சரணம்
தள்ளினோம் ஆகாதென்றெ-ஆனார் தலைக்கு மூலைக்கல்லாய் ஸ்திரமாய் கர்த்தர் மேல் வாழ்க்கையைக் கட்டுவோம்
5ம் சரணம்
அன்றாடகம் என்னுடன் பேசி அன்பாய் விசாரிக்கின்றார் என்னோடு ஜீவிக்க இயேசு உயிர்த்தாரே
6ம் சரணம்
நம்பிக்கையுள்ள வல்ல - ஜீவ நல்ல மார்க்கமிதுவே நாமும் உயிர்த்து நம் கர்த்தரை சேருவோம்