உன்னத தேவ குமாரனே உம்மை துதிக்கிறோம்
unnatha theeva kumaaranee ummai thuthikkirroom
உன்னத தேவ குமாரனே உம்மை துதிக்கிறோம் உன்னத தேவ குமாரனே உம்மை தொழுகிறோம். நீர் இரத்தம் சிந்தி மீட்டீரே புது ஜீவன் எனக்கு தந்தீரே மரண வாசல்கள் அடைத்தீரே புது ஆசீர்வாதங்கள் திறந்தீரே திறந்த வாசலை வைத்தீரே என் தேவனே என் தேவனே.
பாவியான என் மீது கிருபை வைத்து அன்பு கூர்ந்தீர் – 2 நீதிமானாய் மாற்றி என்னை உமது வீட்டில் சேர்த்தீரே இழந்த ஆசீர்வாதங்களெல்லாம் திரும்ப எனக்கு தந்தீரே உமது அடிமையாய் மாற்றுமே என் தேவனே என் தேவனே – 2
தாயும் நீரே என் தந்தையும் நீரே உலகம் தோன்றும் முன் குறித்தீரே பெயரை சொல்லி அழைத்தவர் நீரே எனது கருவை கண்டீரே உள்ளங்கையில் வனைந்தவர் நீரே பரம தகப்பன் நீர் தானே உமது சார்பாய் வாழ்கிறேன் என் தேவனே என் தேவனே – 2
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.