TA-2070
Tamil

நாதன் இயேசு கற்றுத்தந்த நற்கிரியைகள்

Uppaga Vendum Naam

20
views
பல்லவி

உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் உலகத்தின் இறுதிவரை கல்வாரித் தொனிதான் மழை மாறி பொழியும் நாள்வரை உழைத்திடுவோம்

1ம் சரணம்

அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம் ஆவியில் அனலும் கொள்வோம் அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்து வேற்றுமையின்றி வாழ்வோம்

2ம் சரணம்

அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம் சரித்திரம் சாட்சி கூறும் இரத்தச் சாட்சிகள் நம்மிடை தோன்றி நாதனுக்காய் மடிவோம்

3ம் சரணம்

கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும் தரித்திரர் ஆனதில்லை இராஜ்ய மேன்மைக்காய் கஷ்டம் அடைந்தோர் நஷ்டப்பட்டதிலை

4ம் சரணம்

உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர் உலர்ந்த எலும்புகளே நீங்கள் அறியா ஒருவர் உங்கள் நடுவில் வந்துவிட்டார்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.