TA-2072
Tamil

யுத்தம் செய்யப் புறப்படுவோம் - நாம்

Utham seiya

22
views
பல்லவி

உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு அழுத்தும் சுமைகளை (தினம்) பற்றும் பாரங்களை – உன்னை பொறுமையுடன் நீ ஒடு நேசரின் மேல் கண் வைத்து ஓடு

1ம் சரணம்

மேகம் போன்ற திரள் கூட்டம் பரிசு பெற்று நிற்கின்றனர் முகம் மலர்ந்து கை அசைத்து வா வா வா என்கின்றனர்

2ம் சரணம்

அவமானத்தை எண்ணாமல் சுமந்தாரே சிலுவைதனை அமர்ந்து விட்டார் அரியணையில் அதிபதியாய் அரசனாய்

3ம் சரணம்

தமக்கு வந்த எதிர்ப்பெல்லாம் தாங்கிக் கொண்ட இரட்சகரை சிந்தையில் நாம் நிறுத்தினால் சோர்ந்து நாம் போவதில்லை

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.