TA-2073
Tamil

ஆராதிப்போம் வாருங்கள்!

Uthayanaeram Vaarunkal!

25
views
பல்லவி

உதித்தார் உலகிலே ஒளியாய் இயேசுவே அணையா தீபமே இதோ மரண திசையில் வாழ்வோர் இவரால் பிழைத்திட- திகழ்ந்தார் தீபமாய்

1ம் சரணம்

ஆதி வார்த்தை தேவன் அதில் ஜீவன் ஒளியும் கண்டோம் கர்த்தர் மகிமையே பக்தர் உள்ளம் தங்குதே

2ம் சரணம்

அன்பே தேவ அன்பே அதின் ஆழம் அறியலாமோ கிருபை சத்யமும் கர்த்தராலே கிடைத்ததே

3ம் சரணம்

காலம் கடைசி காலம் கர்த்தர் மீண்டும் வந்திடும் நேரம் பரத்தில் ஆனந்தம் பெறுவோமே சுதந்திரம்

4ம் சரணம்

சீயோன் பரம சீயோன் சுத்த சாலேம் நகரம் சேர்வோம் காண்போம் பிதா முகம் களிகூர்வோம் சுபதினம்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.