எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்
Uyar Malaiyo
உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2) சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் காணட்டும் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2
ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர் சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2) அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர் இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2
ஆதியும் அந்தமுமானவர் அவர் அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2) இருந்தவரும் இருப்பவரும் சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2
எல்லா நாமத்திலும் மேலானவர் முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் (2) துதிகனம் மகிமைக்கு பாத்திரரே தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.