TA-2082
Tamil

வாலிப வாழ்வினில் இயேசுவின் நிழலில்

Vaalipa Vaazhvinil Iyaesuvin

31
views
பல்லவி

வாலிபரே அணி திரளுங்கள் வாலிபரே அணி திரண்டு வாருங்கள் தேவ நாமம் தேசமெங்கும் பரவும் வழி காணுங்கள்-வாலிபரே Come on! This is god's time for mother india! Come on! Let's together lift up india!

1ம் சரணம்

தீபங்கள் ஏற்றிடுங்கள் ஒன்றாகக் கூடுங்கள் தீப்பிழம்பாய் அனல் கொண்டு தீவிரம் செல்லுங்கள் கோழைகளாய் வாழ்ந்தாலே பயன் ஏது சொல்லுங்கள்? தீரர்களாய் கைகோர்த்தால் ஜெயமுண்டு எழும்புங்கள்

2ம் சரணம்

சபைகள் விழித்தெழவே ஊக்கம் சொல்லுங்கள் தேவ பயம் நல்லிணக்கம் செழிப்பதைக் காணுங்கள் ஆனந்தம் ஊரெங்கும் பொங்கட்டும் ஏங்குங்கள் அழிவில்லா இராஜாங்கம் மிளிரட்டும் வேண்டுங்கள்

3ம் சரணம்

எங்கும் இளைஞரணி சேர்ந்தே துவங்குங்கள் ஊழியர்கள் எழும்பட்டும் எக்காளம் ஊதுங்கள் ஓயாமல் தூதுப்பணி தொடரட்டும் உதவுங்கள் பாராளும் தேவனுக்கே மகிமை சேருங்கள்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.