TA-2084
Tamil

வல்லமை தேவை தேவா

Vaallamai thevai deva

25
views
பல்லவி

வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி திருப்தியாக்கும் உம் கிருபையினால் காலைதோறும் களிகூர்ந்து மகிழும்படி திருப்தியாக்கும் உம் கிருபையினால்

1ம் சரணம்

புகலிடம் நீரே பூமியிலே அடைக்கலம் நீரே தலைமுறை தோறும் – 2 நல்லவரே வல்லவரே நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

2ம் சரணம்

உலகமும் பூமியும் தோன்று முன்னே என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே – 2 நல்லவரே வல்லவரே நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

3ம் சரணம்

துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு ஈடாக என்னை மகிழச் செய்யும் – 2 நல்லவரே வல்லவரே நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

4ம் சரணம்

அற்புத செயல்கள் காணச் செய்யும் மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் – 2 நல்லவரே வல்லவரே நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

5ம் சரணம்

செய்யும் செயல்களை செம்மைப் படுத்தும் செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும் – 2 நல்லவரே வல்லவரே நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

6ம் சரணம்

நாட்களை எண்ணும் அறிவைத் தாரும் ஞானம் நிறைந்த அறிவைத் தாரும் – 2 நல்லவரே வல்லவரே நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

7ம் சரணம்

ஆயுள் நாட்கள் எழுபது தான் வலிமை மிகுந்தோர்க்கு எண்பது தான் – 2 நல்லவரே வல்லவரே நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

8ம் சரணம்

ஆயிரம் ஆண்டுகள் உம் பார்வையில் கடந்து போன ஓர் நாள் போல – 2 நல்லவரே வல்லவரே நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.