♪♫
TA-2089
Tamil
வானோர் பூவோர் கொண்டாட
Vaanor Poovor Kondada
25
views
1ம் சரணம்
வாரம் முற்றும் க்ஷேமமாய் தேவன் காத்தார் தயவாய்; ஆலயத்தில் கூடுவோம், வேதங் கேட்டு வாழ்த்துவோம்; வாரத்தில் மேலானதே, மோட்சம் காட்டும் நாள் இதே.
2ம் சரணம்
யேசு நாதர் ரத்தத்தால் நீதியை நாம் பெற்றதால் நேசர் அவர் நாமத்தில் கூடி வேதங் கேட்கையில் லோக வேலை விட்டோய்வோம், வாஞ்சையோடாராதிப்போம்
3ம் சரணம்
தேவ ஆவி அருளால் தேவ அன்பைக் காண்பதால் ஆவலாகப் போற்றுவோம், தேவ சாயல் ஆகுவோம்; மோட்ச வீட்டின் வாழ்விலே வாழ்வோமாக, பாலரே.
4ம் சரணம்
மாசிலா யெருசலேம், நாம் வசிக்கும் ஆலயம். நீதி அங்கி பெற்றதால் ஜோதியுள்ளோர் யேசுவால்; வாரம் தோறும் பாடுவோம், வேதம் ஓதிப் போற்றுவோம்.
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.