TA-2090
Tamil

வாரம் முற்றும் க்ஷேமமாய்

Vaaram Muttrum Sheamamaai

26
views
பல்லவி

வாராயோ தஞ்சம் இயேசுவண்டை சேராயோ பாராய் உனக்காய் பாடு சகித்தோர் கேளாய் அவரழைத்திடும் தொனியே வாராயோ ! நீ கேளாயோ !

1ம் சரணம்

காலங்கள் மாய்கையிலே கழியுதே கனா போல் நீங்கிடுதே காரிருள் உந்தனை மூடி வருதே கர்த்தரின் பதம் வருவாய்

2ம் சரணம்

நோயதின் வேதனையால் அனுதினம் நொய்து நீ வாடுவதேன் நேயவர் ஆ ! தழும்பேற்றோர் அதினார் நீயுமே சுகமடைவாய்

3ம் சரணம்

இரத்தத்தை சிந்தினாரே உந்தனையே சுத்தனாய் ஆக்கிடவே சத்துருவாகிய உன்னை தமது புத்திரனாக மாற்றுவார்

4ம் சரணம்

தண்ணீரின் முழுக்கினாலே கழுகியே விண்ணதின் ஆவியினால் மன்னவன் இயேசுவின் சாயல் தரித்தே அன்பிலே வளர்ந்திடுவாய்

5ம் சரணம்

இந்நிலம் வந்திடுவார் எந்நேரமோ சொந்தமே ஆனவர்க்காய் சிந்தையே செய்திடுவாய் நண்பனே நீ இந்த வேளையில் வருவாய்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.