TA-2092
Tamil

வாரும், மா தேவனே,

Vaarum Maa Devanae

0
views
பல்லவி

வாரும் நாம் எல்லாரும் கூடி மகிழ் கொண்டாடுவோம் – சற்றும் மாசிலா நம் இயேசு நாதரை வாழ்த்திப் பாடுவோம் ஆ!

1ம் சரணம்

தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத் தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார்

2ம் சரணம்

மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார்

3ம் சரணம்

ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும் நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார்

4ம் சரணம்

மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே – இந்த மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார்

5ம் சரணம்

பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே – அவர் பட்சம் வைத்துறும் தொழும் பரை ரட்சை செய்கிறார்