TA-2104
Tamil

வல்லமை வல்லமை ஆவியே

Vallamai vallamai aaviyae

25
views
பல்லவி

வல்லமை வல்லமை இயேசுவின் வல்லமை அது பெரிய வல்லமை அதிசய வல்லமை

1ம் சரணம்

பயங்கரமாய் பெரும்காரியங்கள் செய்யும் வல்லமையே அதினாலொன்றும் செய்ய முடியாதது இல்லையே

2ம் சரணம்

பூமியில் அவர் பார்த்திடவே அது நடுங்கி அதிருமே பர்வதங்களை அவர் தொட்டிடவே அது புகைந்து போகுமே

3ம் சரணம்

சாத்தானின் எந்த வல்லமை நொறுக்கிடும் வல்லமை சாவினையும் பாதாளத்தையும் ஜெயித்த வல்லமை

4ம் சரணம்

உலர்ந்துபோன எலும்புகள் உயிர்ப்பிக்கும் வல்லமை எந்த அற்புதமும் எல்லா அதிசயமும் நடத்தும் வல்லமை

5ம் சரணம்

நோய்களையும் பெலவீனமும் சுகமாக்கும் வல்லமை ஒரு வார்த்தையிலே எல்லாம் நடந்திடுமே கடல் காற்றும் அடங்குமே

6ம் சரணம்

ஆர்ப்பரிப்போம் கெம்பீரிப்போம் பயங்கர தேவனையே குலுங்கிடுதே நொறுங்கிடுதே எரிகோ கோட்டையே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.